முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

றஜீவன் எம்.பிக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் சரமாரி கேள்வி!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்களா
என்று பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “அதிகளவான இடங்களில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்று வருகின்ற போதிலும்
நீண்ட காலமாக வடமராட்சி கிழக்கு பகுதியில் மட்டும் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
நடைபெறவில்லை.

வடமராட்சி கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவராக இருக்கின்ற நாடளுமன்ற உறுப்பினர் றஜீவன் தன்னுடைய முகநூலில் கடந்த 23 ஆம் திகதி ஒருங்கிணைப்பு
குழு கூட்டம் இடம் பெறுவதாக தெரிவித்திருந்தார்.

ஒருங்கிணைப்பு குழு

இருப்பினும் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிற்போடபட்டிருப்பதாக அதே முகநூலில்
அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக பிரதேச செயலாளர் உட்பட அதிகாரிகள் பலர் அறிந்திருக்கவில்லை.

றஜீவன் எம்.பிக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் சரமாரி கேள்வி! | Vadamarachchi East Development Meetings Delayed

அதன் பின்புதான் முகநூலில் டிசிசி மீட்டிங் திகதி மாற்றப்பட்டிருப்பதாக ரஜீவன்
எம்பி தெரிவித்திருந்தார்.

மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இடம் பெறுவதற்கு முன்பு பிரதேச செயலக
அபிவிருத்தி குழு கூட்டம் இடம்பெற வேண்டும்

அவ்வாறு இடம் பெற்றால்தான் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாம்
தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பில் கலந்து ஆலோசிக்க முடியும்

நீண்ட காலமாக வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி குழு கூட்டம் இடம்பெறாமை
கவலையளிக்கின்றது.

பிரச்சினைகள் 

வடமராட்சி கிழக்கு மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள்
பல்வேறு காணப்படுகின்றன.

இவர்கள் திட்டமிட்டு எங்களுடைய வடமராட்சி கிழக்கு பிரதேசத்தை
புறக்கணிக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது.

றஜீவன் எம்.பிக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் சரமாரி கேள்வி! | Vadamarachchi East Development Meetings Delayed

வருகின்ற ஆண்டு பல காப்பெட்
வீதிகள் யாழ் மாவட்டத்தின் பல பிரதேச செயலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட போதும்
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்டு எந்த ஒரு காப்பெட் வீதியும்
ஒதுக்கப்படவில்லை.

வடமராட்சி கிழக்கில் பல்வேறு பிரச்சனைகள் காணப்படுகின்ற போதும் இவ்வாறு
அபிவிருத்தி குழு கூட்டங்களை நடத்தாது விடுவது திட்டமிட்டு எங்களுடைய மக்களை
புறக்கணிக்கும் ஒரு செயற்பாடாகும்.

எதிர்காலத்தில் இந்த தவறுகளை இவர்கள் கவனத்தில் கொண்டு மக்களுடைய பிரச்சினைகளை
தீர்ப்பதற்காக இவ்வாறான ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை நிச்சயம் நடத்த
வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.