இலங்கை தமிழரசுக் கட்சியானது, 2024 ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய மே நாளுக்கான பிரகடனத்தை வெளியிட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள பிரகடனத்தில், இரத்தம் தோய்ந்த செங்கொடிகளை உயர்த்தியவாறு, உழைத்து உயர்வுபெற்ற உழைப்பாளிகளின் தியாகங்களை நினைவுகூர்ந்து மேன்மை கொள்ளும் நாளே மே நாள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, இரத்தத்தினால் தோய்ந்த செங்கொடிகள், அவை வென்றுதந்த போராட்டங்களின் சுதந்திரத்தின் மாண்பையும் அதன் கண்ணியத்தையும் மனிதகுல வரலாற்றில் இடையறாது பதிவுசெய்துள்ளது என்பதை பெருமையோடு நினைவு கொள்ளும் நாளே இந்த மே நாள் என்றும அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பிரகடனத்தில், “பூமிப்பந்தில் வாழுகின்ற உழைப்பாளர்களின் செம்மையும், செழுமையும், சீர்நிறைந்த வாழ்வியலும் வையகத்தில் முந்தியிருக்கச் செய்யும் வகையில் முழுமை தந்த நாளாக, வேதனைகள் மத்தியிலும் மகிழ்ந்து நிறைவுபெறும் நாளாக மே நாள் வரலாற்றில் வடிவமெடுத்து வருகின்றது என்பதை பெருமையுடன் நினைவு கொள்வோம்.
உலகத் தொழிற்சமூகங்களோடு இணைந்து ஈழத்தமிழர்களும் தங்களின் இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, எல்லாவகை அடிமைத்தனங்களிலிருந்தும் விடுபடப் போராடியவாறு உலகத் தொழிலாளர் நாள் நிகழ்வில் பங்குகொள்வது நிறைவைத் தருகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் இந்த பிரகடனத்தில்..