முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தையிட்டி மக்களை அரசியல் இலாபத்திற்காக தவறாக வழி நடத்தும் அர்ச்சுனா எம்.பி! எழுந்துள்ள குற்றச்சாட்டு..

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுவதற்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கும்
வேளை அவர்களின் உணர்வுகளை மதிக்காமல் பொலிசார் அராஜகமாக நடந்து கொள்வதாக
வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதி பதினெட்டு பேருக்கு சொந்தமான காணி
அந்தக் காணிக்கு உரித்தானவர்கள் வடபகுதியில் தற்போதும் இருக்கிறார்கள்.

தையிட்டி போராட்டம்

யாழ்ப்பாணம்,வுனியா,கொழும்பு உட்பட தையிட்டி காணிக்கு சொந்தமான 18 பேர்
இலங்கையில் உறுதியோடு இருக்கிறார்கள்.

தையிட்டி போராட்டம் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகிறது.

தையிட்டி மக்களை அரசியல் இலாபத்திற்காக தவறாக வழி நடத்தும் அர்ச்சுனா எம்.பி! எழுந்துள்ள குற்றச்சாட்டு.. | Archuna Misleading People Taihiti Political Gain

அதில் எல்லோராலும்
எல்லா நேரத்திலும் பங்கு பெற்ற முடியாது குறிப்பிட்ட சிலர் போராட்டங்களில்
பங்கு பற்றி வருகிறார்கள்.

தையிட்டி காணி மக்களுக்கே கொடுக்கப்பட வேண்டும்
என்பதில் காணிக்கான மக்கள் உரிமை அமைப்பு உறுதியாக இருக்கிறது

தையிட்டி காணிக்குரிய மக்களை நாங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு
கொழும்புக்கு அழைத்துச் சென்று காணிக்கான பௌத்த சாசன அமைச்சரை சந்தித்து பேசி
மக்கள் தங்களுடைய விடயங்களை எடுத்துக் கூறி மக்களுடைய காணி மக்களுக்கு
விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் அமைச்சரும் ஒப்புக்கொண்டார்.

மீட்பதற்காக போராட்டம்

ஆனால் அதற்குப் பிற்பாடு இதுவரை காணி விடுவிக்கப்படவில்லை. அதிலிருந்து
ராணுவங்கள் அகற்றப்பட்டு பொலிசார் தற்போது இருக்கிறார்கள்.

தையிட்டி மக்களை அரசியல் இலாபத்திற்காக தவறாக வழி நடத்தும் அர்ச்சுனா எம்.பி! எழுந்துள்ள குற்றச்சாட்டு.. | Archuna Misleading People Taihiti Political Gain

தங்களுடைய காணியை
மீட்பதற்காக போராட்டம் நடத்தும் மக்களை பொலிசார் விரட்டுகிறார்கள்

அதற்குப் பிற்பாடு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தையிட்டி
அமைந்திருக்கின்ற காணிக்கு சொந்தமான குறிப்பிட்ட நான்கு பேரை விகாரைக்குள்
அழைத்துச் சென்று அந்த விகாராதிபதியை சந்தித்தபின் காணி பெற்றுக் கொடுப்பதாக
கூறியுள்ளார்.

 நான் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவிற்கும், கௌசல்யாவிற்கும்
ஒன்றை மட்டும் தெளிவாக கூறுகிறேன்
காணிக்கான நான்கு நபர்களை நீங்கள் அழைத்துச் சென்றதை நான் வரவேற்கிறேன்.

அரசியல் இலாபம்

ஆனால்
காணிக்கான உரிமையாளர்கள் இன்னும் 14 பேர் வெளியில் இருக்கிறார்கள்

வெளியில் இருக்கும் அந்த 14 பேருக்கும் காரணிக்கான உறுதி இருக்கின்றது.

தையிட்டி மக்களை அரசியல் இலாபத்திற்காக தவறாக வழி நடத்தும் அர்ச்சுனா எம்.பி! எழுந்துள்ள குற்றச்சாட்டு.. | Archuna Misleading People Taihiti Political Gain

ஏன் அவர்களை நீங்கள் விட்டுவிட்டு நான்கு பேரை மட்டும் அழைத்துச் சென்று
விகாராதிபதியை சந்தித்தீர்கள்?காரணம் என்ன?

தையிட்டி மக்களுடைய போராட்டத்தை அர்ச்சுனா இராமநாதன் தன்னுடைய அரசியல்
இலாபத்திற்காக பாவிக்கின்றார்.

  அரசாங்கத்தினதும் பொலிசாரினதும் அராஜகத்திற்கு எதிராக காணிக்கான மக்கள் உரிமை
அமைப்பு வெகு விரைவில் மிகப்பெரிய போராட்டங்களை செய்ய வேண்டிய தேவைக்குள்
தள்ளப்படும் என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.