கொஹுவல சந்தி (Kohuwala Junction) வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதியில் மேம்பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளமையாலேயே நாளை (15) முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளது.
பொதுமக்களிடம் வேண்டுகோள்
அத்துடன்,மேம்பாலம் நிர்மாணப் பணிகள் 2 மாத காலத்திற்கு மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அக்காலப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், கொஹுவல பாலத்தை நோக்கி பயணிக்கும் கனரக வாகனங்கள் அப்பகுதியுனூடாக பயணப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.