யாழ்ப்பாணத்தில் (Jaffna) அதிநவீன சொகுசு கார் ஒன்றை மோசடியான முறையில் பெற்றுக்கொள்ள முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணொருவருக்கு சொந்தமான வாகனமே இவ்வாறு மோசடியாக பெற முயற்சிக்கப்பட்டுள்ளது.
குறித்த காரினை வாடகை அடிப்படையில் பயன்படுத்துவதற்காக அமர்த்தப்பட்ட சாரதியால் இந்த மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் முறைப்பாடு
இதனடிப்படையில், காரின் உரிமையை மாற்றுவதற்கான ஆவணங்களை மோசடியான முறையில் சமர்ப்பிக்க முயற்சித்த வேளையில் சாரதி சிக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பெண்ணின் முறைப்பாட்டுக்கு அமைய விசரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் கார் சாரதியை கைது செய்துள்ளதுடன் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அவரை முன்னிலைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.