அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களின் இடங்களில் பெரும்பான்மை சமூகத்தின் ஆதிக்கத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு(Batticalo) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்( R.Shanakiyan) குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவரது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் களுவாஞ்சிகுடிப் பகுயில் அமைந்துள்ள இந்து ஆலயங்களுக்கு வழங்கப்பட்ட நிதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை அவர் நேற்று(26.06.2024) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதிபர் ரணில்(Ranil Wickremesinghe) மட்டக்களப்புக்கு வரும்போது அவருக்கு உணவு வழங்கினால் அமைச்சுப் பதவி பெறக் கூடிய அளவிற்கு நிலமை வந்துள்ளது.
இந்த அமைச்சுப் பதவியை வைத்துக் கொண்டு தொடர்ந்தும் தெற்கின், அரசாங்கத்தினுடைய நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்குரிய பரிசுகளாகவே இவர்களுக்கு விசேடமான நிதி, இலஞ்சம் கிடைப்பதாகவும் நாம் அறிகின்றோம்.
இதனை மக்கள் நன்கு அறிந்து, இந்த மாவட்டம் தொடர்ந்து தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற மாவட்டமாக இருக்க வேண்டும் என நாம் நினைத்தால் மக்கள் எதிர்காலத்தில் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/EWsJTWKNUxM