ஹிருணிகா (Hirunika) பல இடங்களில் நன்மை பயக்கக்கூடிய வேலைத்திட்டங்களை செய்யவிருந்த நிலையில் இப்போது சிறை செல்லவிருப்பதால் சஜித் (Sajith) அணியினரின் ஆர்ப்பாட்டத்திற்கு மிகத் தடையாக இருப்பதாக இலங்கையின் அரசியல் ஆய்வாளர் எம். எம். நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஹிருணிகா கைது செய்யப்பட்டமை சஜித் அணிக்கான பின்னடைவு என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கொழும்பு (Colombo) மாநகரில் பல இடங்களில் அரசுக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா அணிதிரட்டவுள்ளார் என அரசின் உயர்மட்டத்திற்கு புலனாய்வு செய்தி கொடுக்கப்பட்டிருக்கின்றது என சுட்டிக்காட்டினார்.
அரகலய போராட்டத்தில் ஹிருணிக்கா ஆதரவாளர்கள் முன்னின்று செயற்பட்டார்கள் என தெரிவித்தார்.
இதேவேளை ஹிருணிக்கா ஒரு குற்றவியல் குற்றத்திற்காகவே கைது செய்யப்பட்டிருக்கின்றார் ஆய்வாளர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
https://www.youtube.com/embed/E55qmGvSM_g