Courtesy: Sivaa Mayuri
இலங்கையின் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா (Mervyn Silva), அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன ஆகியோரை ஜனாதிபதிக்கான சாத்தியமான வேட்பாளர்களாக பரிந்துரைத்துள்ளார்.
இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய ஒரு தலைவர் தேவை என்றும் சில்வா வலியுறுத்தியுள்ளார்.
ஏமாற்று அரசியல்வாதிகள்
தேர்தல் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசியல்வாதிகள், ஆடம்பரமான வாக்குறுதிகளை வழங்கும் போக்கை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் கீழ் பணியாற்றிய அனுபவத்திலிருந்து, பிரசாரங்களின் போது பொருட்கள் மற்றும் உள்ளாடைகள் உட்பட பல்வேறு பொருட்களை விநியோகித்ததை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
இந்த முயற்சிகளுக்கு மத்தியிலும் மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று காலிமுகத்திடலில் சஜித் பிரேமதாசவின் பாரிய பேரணிகள் வெற்றியை உறுதிப்படுத்தவில்லை எனவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஜனாதிபதி பதவிக்கு சிறந்த வேட்பாளர் என்பது தமது கருத்தாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு. மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் மைத்ரி குணரத்னவுடன் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதாகவும் மேவின் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஏமாற்று அரசியல்வாதிகள் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று மேவின் சில்வா வலியுறுத்தியுள்ளார்.