இலங்கையின் (Srilanka) 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பிறந்த நாள் இன்றாகும்.
இன்று நவம்பர் 24 ஆம் திகதி தனது 57 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
1968ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் திகதி பிறந்த அவர் தனது ஆரம்ப கல்வியை தம்புத்தேகம ஆரம்ப பாடசாலையில் முன்னெடுத்தார்.
பின்னர் தம்புத்தேகம மத்திய மகா வித்தியாலயத்திற்குச் சென்றார்.
பிறந்த நாள்
உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கல்வி கற்ற அவர் 1992ம் ஆண்டு களனி பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பிரிவில் இணைந்துகொண்டார். 1995ம் ஆண்டு விஞ்ஞானப் பட்டத்தைப் பெற்றார்.

1987ம் ஆண்டு முற்போக்கு மாணவர் சங்கத்தின் செயற்பாட்டாளராக மாறிய அவர் மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டின் இடதுசாரி அரசியலை முன்னோக்கிச் கொண்டு செல்ல பங்களிப்பு வழங்கினார்.
நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி
2004 நாடாளுமன்றத் தேர்தலில், குருநாகல் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான விருப்பு வாக்குகளைப் பெற்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசாங்கத்தின் கீழ் விவசாயம், காணி, நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2008 ஆம் ஆண்டு ஜே.வி.பி.யின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2010 ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் மூலம் மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திரும்பினார். 2015 ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரம்மிக்க ஜனாதிபதியாக பதவியேற்றார்.

