ஜான்வி கபூர்
தமிழ் சினிமா ஏன் இந்திய சினிமா தலையில் வைத்து கொண்டாடிய நடிகை தான் ஸ்ரீதேவி.
80களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் கொடிகட்டி பறந்த இவர் இப்போது நம்முடன் இல்லை. டயட், பிட்னஸ் என இருந்த நடிகைக்கு நேர்ந்த மரணம் அனைவருக்கும் அதிர்ச்சி தான்.
தற்போது நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் சினிமாவில் நடித்து வருகிறார்கள். ஜான்வி கபூர் பாலிவுட்டை தாண்டி இப்போது தெலுங்கு படங்களில் கமிட்டாகியுள்ளார், எப்போது தமிழ் பக்கம் வருவார் என தெரியவில்லை.
சண்டையில் பேசாமல் இருந்த பெற்றோர்களுடன் மீண்டும் இணைந்துள்ள சீரியல் நடிகை ஆல்யா மானசா… அழகிய குடும்ப போட்டோ
ஷாக்கிங் தகவல்
நடிகை ஸ்ரீதேவி போலவே பிட்னஸில் அதிக அக்கறை காட்டும் ஜான்வி எப்போது உடற்பயிற்சி செய்து பிட்டாக இருப்பார். சாப்பாட்டில் கூட அதிக கவனம் செலுத்தும் ஜான்வி கபூர் திடீரென உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது வேலை அனைத்தையும் தள்ளி வைத்துள்ளார், வியாழக்கிழமை அதாவது இன்று உடல்நிலை மிகவும் சோசமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு Food Poison பிரச்சனை என்று கூறப்படுகிறது, நாளை அவர் வீடு திரும்பிவிடுவார் என்கின்றனர்.