முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜீவன் தொண்டமானுக்கு ஆதரவு தெரிவித்து களனிவெளி பெருந்தோட்ட மக்கள் பணி பகிஷ்கரிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் இயங்கும் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்துக்கு சொந்தமான அனைத்து பெருந்தோட்டங்களிலும் தொழிலாளர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

இரண்டு முக்கிய காரணங்களை முன்வைத்து தொழிலாளர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் இன்று(23.07.2024) ஈடுப்பட்டுள்ளனர்.

பெருந்தோட்ட மக்களி்ன் எச்சரிக்கை 

1,700 ரூபாய் சம்பளத்தை தர மறுக்கும் களனிவெளி நிறுவன தொழிலாளர்கள் அடி வயிற்றில் அடித்து அடாவடி போக்கை கடைப்பிடிப்பதாகவும்,

இத்தகைய அடாவடியை கண்டித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய இந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்ததை கண்டித்தும் இந்த பணிப்புறக்கணிப்பு செய்யப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜீவன் தொண்டமானுக்கு ஆதரவு தெரிவித்து களனிவெளி பெருந்தோட்ட மக்கள் பணி பகிஷ்கரிப்பு! | Kalaniveli Estate Workers Work Boycott Jeevan

அந்த வகையில், களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் கீழ் இயங்கும் போடைஸ், பட்டல் கல, சாஞ்சிமலை, இன்வெரி, இஞ்ஸ்ட்ரி, ரொப்கில், பிலிபோனி

அதேபோல் நுவரெலியா பீட்று தோட்டத்திற்கு கீழ் இயங்கும் பீட்று, லவர்சிலீப், மூன்பிளேன், மாகாஸ்தோட்ட, ஸ்கிராப் ஆகிய தோட்டங்களுடன் ஒலிபண்ட் மற்றும் நுவரெலியா டிவிஷன் ஆகிய தோட்டங்களிலும் தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

அதேபோல நானுஓயா பிரதேசத்தில் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் எடின்புரோ, கிளாசோ, ஆடிவன், மற்றும் கிளாஸோ மேல் பிரிவு கீழ் பிரிவு ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களும் மற்றும் உடரதல்ல மேல் மற்றும் கீழ் பிரிவு தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களும் பணி புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஜீவன் தொண்டமானுக்கு ஆதரவு தெரிவித்து களனிவெளி பெருந்தோட்ட மக்கள் பணி பகிஷ்கரிப்பு! | Kalaniveli Estate Workers Work Boycott Jeevan

இதேவேளை, களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் கீழ் இயங்கும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஹேலீஸ் பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ரதல்ல மேல்பிரிவு தொழிலாளர்களும், வங்கி ஓயா கீழ் பிரிவு தொழிலாளர்களும் பணிபுறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

மேலும், எங்களுடைய சம்பள விடயத்திற்கும், அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், இதற்கான தீர்வுகள் உடனடியாக கிடைக்காத பட்சத்தில் வேறு விதத்தில் தொடர் போராட்டங்கள் இடம்பெறும் என்றும் பெருந்தோட்ட மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.