ஷங்கர் இயக்கத்தில் கடந்த ஐந்து வருடங்களாக தயாரிப்பில் இருந்த இந்தியன் 2 படம் கடந்த ஜூலை 12ம் தேதி திரைக்கு வந்தது.
பெரிய பட்ஜெட்டில் ஷங்கர் அவரது பாணியில் பிரம்மாண்டமாக படத்தை இயக்கி இருந்தார். ஆனால் அதற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. படத்தை நெட்டிசன்கள் அதிகம் ட்ரோல் செய்ததையும் பார்த்தோம்.
வீடு செட்டுக்கு இத்தனை கோடியா?
இந்தியன் 2 படத்திற்காக செட் போட ஷங்கர் மிக அதிகமாக செலவு செய்து இருக்கிறார். எஸ்ஜே சூர்யா தற்போது அளித்த பேட்டியில் இந்தியன் 2 படம் பற்றி ஒரு முக்கிய தகவலை கூறி இருக்கிறார்.
படத்தின் எஸ்ஜே சூர்யாவின் வீடு செட் போட மட்டும் 8 கோடி ரூபாயை ஷங்கர் செலவு செய்தாராம்.
இந்த தகவல் சினிமா ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஏற்படுத்தி இருக்கிறது.