அவுஸ்திரேலியாவில் (Australia) இருக்கும் தனது பிள்ளைகளை விட்டுவிட்டு கட்சி வேறுபாடின்றி நாட்டிற்கு எதாவது செய்யவேண்டும் என்று தாம் வந்துள்ளதாக இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் (T.M. Dilshan) கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி நேற்று (20) ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்க்கட்சித் தலைவரைச் சுற்றி நல்ல அணி இருப்பதாகவும், ஒரு நல்ல தலைவருக்கு நல்ல அணி தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இரட்டைக் குடியுரிமை
தாம் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் எனவும், நாடாளுமன்றம் செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தேவை ஏற்பட்டால் தனது குடியுரிமையை விலக்கிக் கொள்ளத் தயார் எனவும், விளையாட்டு அமைச்சர் பதவியையோ அல்லது எதையோ எதிர்பார்த்து எதிர்க்கட்சியில் இணையவில்லை எனவும் திலகரத்ன டில்ஷான் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.