முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வழி இதுதான்! டக்ளஸ் தேவானந்தா பகிரங்கம்

எதிர்வரும் நாடாளுமன்றம், மாகாணசபை, உள்ளூராட்சிமன்ற தேர்தல்களிலே மக்கள் என்னோடு அணிதிரண்டு பயணிப்பார்களேயானால் குறுகிய காலத்திற்குள் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்கலாம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் (Batticaloa) இன்றையதினம்(23) ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில், ”இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாடு இருளில் இருந்தது.

ரணில் விக்ரமசிங்க

அத்தியாவசியப் பொருட்கள்
இல்லாமலும், பற்றாக்குறையாகவும், அனைத்திற்கும் வரிசை, பொருட்களுக்கு விலை அதிகமாக இருந்தன.

இதனை இரண்டு வருடத்திற்குள் ஜனாதிபதி மாற்றியிருக்கின்றார்.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வழி இதுதான்! டக்ளஸ் தேவானந்தா பகிரங்கம் | Unity Needed To Solve Tamil Problems Douglas

இன்னும் அது மாற்றம் பெறவேண்டும் பொருட்களின் விலைகள் இன்னும் குறைக்கப்பட
வேண்டும்.அந்த வகையில் ஜனாதிபதி நாட்டின் நலன்கருதியே முடிவுகளை
எடுத்திருக்கின்றார்.

நாடு இருளில் மூழ்கடிக்கும்போது நாட்டை மீட்கக்கூடியவர் யார் என்பதை அறிந்து
அப்போதே நான் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) பெயரை
சிபாரிசு செய்திருந்தேன்.

ஜனாதிபதி வேட்பாளர்கள்

என்னுடைய எதிர்பார்ப்பும் இவரால்தான்
இப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என நான் நம்புகின்றேன்.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வழி இதுதான்! டக்ளஸ் தேவானந்தா பகிரங்கம் | Unity Needed To Solve Tamil Problems Douglas

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களை தமிழ் பிரதிநிதிகள் சந்திக்கும்போது 13 வது
திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவீர்களா என கேட்கின்றார்கள் அதனை அவர்களிடம்
கேட்க வேண்டியதில்லை.

அனைத்தும் அரசியலமைப்பிலே உள்ளது. அதனைப் பெறுவதற்கு
நாங்கள்தான் முன்னெடுக்க வேண்டும்.

தமிழ் பேசும் மக்கள்

ஆனால் தமிழ் பேசும் மக்கள் அதனை என்னால் செய்ய முடியும்
வருகின்ற நாடாளுமன்றம், மகாணசபை, உள்ளூராட்சிமன்ற தேர்தல்களிலே மக்கள் என்னோடு
அணிதிரண்டு பணிப்பார்களேயானால் குறுகிய காலத்திற்குள் தமிழ் பேசும் மக்கள்
எதிர்கொள்கின்ற எதிர்கொள்கின்ற சகல விதமான பிரச்சினைகளையும் தீர்க்கலாம்.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வழி இதுதான்! டக்ளஸ் தேவானந்தா பகிரங்கம் | Unity Needed To Solve Tamil Problems Douglas

நாங்கள் சொல்வதைச் செய்பவர்கள், செய்வதைச் சொல்பவர்கள்.

எனவே எமக்கும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலே 4, 5 ஆசனங்கள் இருந்தாலே
என்னால் விரைவில் இலகுவாக வேகமாக பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும்” என அவர்
இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.