முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சர்வதேச கப்பல் போக்குவரத்தை அச்சுறுத்தும் அமெரிக்கா: பதட்டத்தில் ரஷ்யா

சர்வதேச கப்பல் போக்குவரத்தை அச்சுறுத்தும் அமெரிக்காவின் முடிவுகள் குறித்து ரஷ்யா கவலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம், வெனிசுலா விஷயத்தில் ஒரு அபாயகரமான தவறை செய்யாது என்று நம்புவதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சகம்

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்தின் மீது அமெரிக்கா அழுத்தத்தை அதிகரிக்க முயற்சித்து வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக வெனிசுலாவிற்குள் நுழையும் அல்லது வெளியேறும் அனைத்து தடைசெய்யப்பட்ட எண்ணெய் டேங்கர்களையும் தடுத்து கைப்பற்ற ட்ரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

சர்வதேச கப்பல் போக்குவரத்தை அச்சுறுத்தும் அமெரிக்கா: பதட்டத்தில் ரஷ்யா | Russia Warns Us Over Venezuela Oil Shipping Routes

இதற்கு முன்னதாக, கடந்த வாரம் வெனிசுலா கடற்கரையில் அமெரிக்கா ஒரு தடைசெய்யப்பட்ட எண்ணெய் டேங்கரை கைப்பற்றியதையடுத்து மில்லியன் கணக்கான பீப்பாய்கள் அத்தோடு எண்ணெயை ஏற்றிச் செல்லும் மற்றும் ஏற்றப்பட்ட கப்பல்கள் என்பன வெனிசுலா கடலில் செயலற்ற நிலையில் இருப்பதைத் தொடர்ந்து பறிமுதல் அபாயம் இல்லாமல் ஒரு தடை மட்டும் நடைமுறையில் உள்ளது.

இந்தநிலையில், குறித்த விவகாரம் குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.

அபாயகரமான தவறு

மேலும் தெரிவித்துள்ள அமைச்சகம், “எங்களுக்கு நட்பு நாடான வெனிசுலாவைச் சுற்றி தொடர்ந்து மற்றும் வேண்டுமென்றே பதற்றங்கள் அதிகரிப்பதை நாங்கள் கவனிக்கின்றோம்.

குறிப்பாக, சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் முடிவுகளின் ஒருதலைப்பட்சத் தன்மை கவலைக்குரியது.

சர்வதேச கப்பல் போக்குவரத்தை அச்சுறுத்தும் அமெரிக்கா: பதட்டத்தில் ரஷ்யா | Russia Warns Us Over Venezuela Oil Shipping Routes

பகுத்தறிவு மற்றும் நடைமுறை அணுகுமுறையால் வகைப்படுத்தப்படும் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், ஒரு அபாயகரமான தவறை செய்யாது என்று நாங்கள் நம்புகின்றோம்.

அதோடு, அமெரிக்காவிற்கும் மற்றும் வெனிசுலாவிற்கும் இடையிலான உரையாடலை இயல்பாக்குவதை ரஷ்யா ஆதரித்தது.

முழு மேற்கத்திய பகுதிகளில் கணிக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு சூழ்நிலைக்கு அமெரிக்கா செல்லாது என்பதுடன் மதுரோ அரசாங்கத்தின் போக்கை ரஷ்யா அதரிக்கின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.