யாழ்ப்பாணத்திலிருந்து (jaffna) கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட பேருந்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் கிளிநொச்சி (Kilinochchi) பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏ – 09 வீதி இயக்கச்சி பகுதியில் நேற்று (23.08.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பரந்தன் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
தடக்கி விழுந்து விபத்து
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவு 10.30 மணியளவில் நடந்து சென்ற நபர் வீதியின் நடுவே நின்று பேருந்தை மறித்துள்ளார்.
இந்நிலையில் பேருந்தின் நடத்துநர் மறித்தவரை வீதியை விட்டு விலகி நிற்குமாறு பேசி விட்டு பேருந்தை எடுக்க முற்படுகையில் குறித்த நபர் தடக்கி வீழ்ந்த போது விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விபத்து தொடர்பாக பளை காவல்துறையினர்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.