முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவான பிரச்சார பணிகள் தீவிரம்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் சூடுப்பிடித்துள்ள நிலையில் , வவுனியாவில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவான பிரசாரத்தைத் திட்டமிடும் கூட்டம் ஒன்று இடம்பெற்றள்ளது.

குறித்த கூட்டமானது இன்று (25.08.2024) வவுனியா (Vavuniya) விருந்தினர் விடுதியில் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டமானது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

தமிழ்ப் பொது வேட்பாளர்

இந்த சந்திப்பின் போது, பிரச்சாரப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் ஒரு பெரும் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவான பிரச்சார பணிகள் தீவிரம்! | Tamil Candidate Ariyanethiran S Campaign

இதற்கமைய, , நாளை (27) செவ்வாய்க்கிழமை வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பிரசாரப் பணிகளை தீவிரமாக முன்னெடுப்பது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கட்சி சார் அரசியல்வாதிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் பங்கு பற்றியுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரான அரியனேந்திரனுக்கு (P. Ariyanethiran) வடக்குக் கிழக்கில் உள்ள 12 லட்சம் வாக்குகளில் 50 வீதமான வாக்குகள் கிடைக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எப்பின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்