இதுநாள்வரை ரஷ்யாவிற்குள்(russia) நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு (ukraine)வழங்க மறுத்து வந்த அமெரிக்காவை(united states) தன் பக்கம் இழுத்து நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்காவுடன் உக்ரைன் செய்துகொண்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி சுமார் 180 மைல்கள் தொலைவு வரை சென்று தாக்கும் JASSM ஏவுகணை ஒப்பந்தமே இவ்வாறு கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மிகவும் ஆபத்தான ஏவுகணை
இந்த ஒப்பந்தத்தை செய்து உக்ரைன் சாதித்துள்ளதாக கசிந்த தகவல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை(Vladimir Putin) கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் Lockheed Martin என்ற நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் இந்த ஏவுகணையானது நிலத்திலும் வானத்திலும் தாக்குதலுக்கு பயன்படுத்த முடியும். மிகவும் ஆபத்தான இந்த ஏவுகணை மிக விரைவில் உக்ரைன் கைகளில் வந்து சேரும் என்றே கூறப்படுகிறது.
தொலைதூர ஆயுதங்களுடன் உக்ரைன் களமிறங்கினால், ரஷ்யா பல நூறு மைல்கள் பின்னுக்கு தள்ளப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் எல்லைக்கு அருகே ஆயுத குவியலுடன் ரஷ்யா செயல்படுவதாலேயே, அவர்கள் உக்ரைனுக்குள் தாக்குதல் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கின்றனர்.
புடினுக்கு கவலை அளிக்கும் விவகாரம்
உக்ரைனின் குறிப்பிட்ட பகுதியில் இருந்து JASSM ஏவுகணை ஏவப்பட்டால், ரஷ்யாவில் உள்ள குறைந்தது 30 விமானத் தளங்களுக்கு சிக்கல் ஏற்படும் என போரியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், ரஷ்ய தலைநகர் மொஸ்கோவை நெருங்கவும் முடியும் என்பதால் ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு இது கவலை அளிக்கும் விவகாரம் என்றே அவர்கள் கூறுகின்றனர்.
JASSM ஏவுகணையானது அமெரிக்க தயாரிப்பு போர் விமானங்களில் மட்டுமே பொருத்த முடியும்.
ஆனால் உக்ரைன் பயன்படுத்தும் சோவியத் காலகட்டத்தில் உள்ள விமானங்களில் பொருத்தும் வகையில் அமெரிக்கா தயார் செய்து வழங்கும் என்றும் தகவல் கசிந்துள்ளது.
பழைய JASSM ஏவுகணையானது 230 மைல்கள் வரையில் சென்று தாக்கும். ஆனால் தற்போதைய JASSM ஏவுகணை 500 மைல்கள் வரையில் பறக்கும் தன்மை கொண்டது. இதில் உக்ரைனுக்கு எந்த வகை JASSM ஏவுகணையை அமெரிக்கா வழங்க உள்ளது என்ற தகவல் உறுதி செய்யப்படவில்லை.