எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்கள் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்றைய தினம் விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது.
இன்றைய தினம் முற்பகல் 10.00 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கண்காணிப்பு
எதிர்கால தேர்தல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.