டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தம் படிப்படிப்பாக சீரமைக்கப்பட்டு வரும் நிலையில் மீண்டுமொரு இயற்கை அனர்த்தம் பதிவாகியுள்ளது.
இதன்படி கண்டி, ஹுன்னஸ்கிரிய நகருக்கு அருகில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
3 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று(18) காலை இப்பகுதியில் பெய்த மழையுடன் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படும் குடும்பங்கள்
நிலவும் ஆபத்து காரணமாக, அருகிலுள்ள 2 தங்குமிடங்களில் இருந்து 90 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், குருநாகல், பதுளை, மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

