முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பில் இருந்தும் தலைவர்கள் உருவாக வேண்டும்: நாமல் ராஜபக்ச

மட்டக்களப்பில் இருந்தும் தலைவர்கள் உருவாக வேண்டும் என்றும்
அதற்கு தான் உதவி செய்வதாகவும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல்
ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் (10.09.2024) நடைபெற்ற தேர்தல் பிரசார
கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கிழக்கு மாகாணம் எனது தந்தையின் காலத்திலேயே அதிகமான அபிவிருத்திகளை கண்டது.

தெற்கில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகளைப் போன்று கிழக்கிலும்
மேற்கொள்ளப்பட வேண்டும்.

எமது அரசாங்கத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் கொண்டுவரப்படும் என நான் உறுதியளிக்கின்றேன்.

மட்டக்களப்பில் இருந்தும் தலைவர்கள் உருவாக வேண்டும்: நாமல் ராஜபக்ச | Namal Rajapaksa Presidential Election Meeting

இதன் மூலம் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்திகள் என்பன முன்னேற்றம்
அடையும் இங்குள்ள விவசாயம், கடற்றொழில் என்பனவற்றிற்கு ஏற்றுமதி மூலம்
உலக சந்தையில் தொழில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

எங்களது தேவை இந்த நாட்டை அபிவிருத்தியுடைய நாட்டாக மாற்ற வேண்டும்
என்பதும் இங்குள்ள இளைஞர்களுக்கு பலமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதே
எமது நோக்கமாகும்.

இங்குள்ள அரசியல்வாதிகள் இன மத ரீதியான பணிகளே முன்னெடுத்து வருகின்றனர்.

ஏற்படவுள்ள மாற்றத்தினை பற்றி பிழையான தகவல்கள் வழங்க முடியாது ஆனால் இவர்களுக்கான
நல்ல ஒரு எதிர்காலத்தை என்னால் வழங்க முடியும் என உறுதி கூறுகின்றேன்.

மட்டக்களப்பில் இருந்தும் தலைவர்கள் உருவாக வேண்டும்: நாமல் ராஜபக்ச | Namal Rajapaksa Presidential Election Meeting

இலங்கையிலுள்ள கலாச்சாரங்களை இங்குள்ள இளைஞர் யுவதிகளைப் பற்றி எவருமே
சிந்திப்பதில்லை.

இலங்கையிலுள்ள கலாசாரங்களை பௌத்த கலாசாரத்துக்கு சமனாக
கிழக்கு மாகாண கலாசாரங்களையும் என்னால் பாதுகாக்க முடியும் என
உறுதி கூறுகின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி
அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.