தேசிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் இதுவரையில் 50 வீத வாக்குகள் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை உருவாகவில்லை என நாடாளுமன்ற உறப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
50 வீத வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கு பிரசாரப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்வொன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
சஜித் பிரேமதாச முன்னிலை
எவ்வாறெனினும் தற்போதைக்கு ஜனாதிபதி வேட்பாளர்களில் சஜித் பிரேமதாச முன்னிலை வகிப்பதாகவும்,ஏனைய வேட்பாளர்கள் மிகவும் குறைந்த நிலையிலேயே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் சுமார் 14 மில்லியன் மக்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும், அவ்வாறு வாக்களிக்கப்பட்டால் 7 மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.