திருகோணமலை(trincomale) நிலாவெளி கடற்கரை அலஸ்வத்தை பகுதியில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் இன்று (30) பிற்பகல் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
கடற்கரையில் கடமையாற்றிய காவல்துறை உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள் இந்த இரு இளைஞர்களையும் கடும் சிரமத்திற்கு மத்தியில் காப்பாற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த இளைஞர்கள்
யாழ்ப்பாணம்(jaffna) சாவகச்சேரியைச் சேர்ந்த உதயகுமார் ஜெதரன் (வயது 20) மற்றும் கோடீஸ்வரன் சனுஜன் (வயது 21) ஆகிய இருவருமே இவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களாவர்.
இந்த இரு இளைஞர்களும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களை காப்பாற்றிய போது நூறு மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாக உயிர் காக்கும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.