முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை மறைக்கும் முன்னாள் ஜனாதிபதிகள்: அருட்தந்தை குற்றச்சாட்டு

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க  ஆகியோர் மூடி மறைத்துள்ளதாக கொழும்பு பேராயர் இல்லத்தின் பேச்சாளர் அருட்தந்தை சிரில் காமினி குற்றம்சாட்டியுள்ளார்.

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சமூக செயற்பாட்டாளரான சுனந்த தேசப்பரியவினால் எழுதப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தொிவிக்கையில்,

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை மறைக்கும் முன்னாள் ஜனாதிபதிகள்: அருட்தந்தை குற்றச்சாட்டு | Srilanka Bomp Blast Investigation 

ஈஸ்டர் தாக்குதல்

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை செய்த பிரதான சூத்திரதாரி யார் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

சிலர் எம்மிடம் கேட்கிறார்கள், 5 வருடங்களாக எதற்காக இந்த ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தை இழுத்துக் கொண்டு போகின்றீர்கள் என்று.

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை செய்த பிரதான சூத்திரதாரி யார் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

இந்த உண்மையை தெரிந்துக் கொண்டால், நாட்டில் கொலை கலாசாரத்தை ஆரம்பித்தது யார்? இந்தக் கொலைகளை சாதாரணமாக்கியது யார்?

அரசியல் அதிகாரத்திற்கு வர நாட்டு மக்களின் உயிர்களை பலியொடுத்த தரப்பினர் யார் என்பதை நாட்டு மக்களும் புரிந்துக் கொள்வார்கள்.

இதன் பின்னால் எந்த அரசியல் சக்தி உள்ளது? எந்த எந்த அரசியல் அதிகாரிகள் இதன் பின்னணியில் உள்ளார்கள் என்பதை நாம் தேட வேண்டும்.

நாம் இவர்களை அடையாளப்படுத்தியவுடன், இவர்களிடமிருந்து இந்த சமூகத்தை பிரிக்க வேண்டும். அல்லது இந்த சமூகத்திலிருந்து இவர்களை வேறுபடுத்த வேண்டும்.

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை மறைக்கும் முன்னாள் ஜனாதிபதிகள்: அருட்தந்தை குற்றச்சாட்டு | Srilanka Bomp Blast Investigation 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சனல் 4 ஊடகத்தில் வெளியான ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தகவல்களை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்திருந்தார்.

இந்தக் குழுவின் அறிக்கையும் அவரிடம் கையளிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டது. ஆனால், தற்போது குறித்த அறிக்கை காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மிகவும் உறுதியான சாட்சிகள் மற்றும் தரவுகள் காணப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்சவோ, ரணில் விக்ரமசிங்கவோ இது தொடர்பாக ஆணைக்குழுக்களை அமைத்தாலும், அடுத்தக்கட்ட நகர்வுகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை.

ஏன் இப்படி செய்ய வேண்டும்? ஒன்று இவர்கள் இந்தத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்.

அல்லது, தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் இவர்களது நெருங்கிய தரப்பினராக இருக்க வேண்டும். அப்படியானால் மட்டும் தான் இந்த விடயங்களை இவர்கள் மூடிமறைத்திருக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.