முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாடாளுமன்ற தேர்தலில் பெண்களின் உரிமை : முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாடாளுமன்ற தேர்தலில் 25% பெண்களின் உரிமையினை உறுதிப்படுத்த வேண்டும் என  பெண் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்தோடு, தமிழ் தேசிய கட்சிகளை ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயத்தை இன்று (02) மட்டக்களப்பில் (Batticaloa) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சிவில் சமூக செயற்பாட்டாளர் மிரேகா நாகேஷ்வரன் (Mireka Nageswaran), மட்டக்களப்பு சிவில் வலையமைப்பின் உறுப்பினர்களான குணரெட்னம் யுனிதா (Gunaretnam Unita) மற்றும் பிரசாந்தன் பவித்திரா (Prasanthan Bavithra) ஆகியோர் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் தேசிய கட்சி

இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “வடகிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டோம்.

நாடாளுமன்ற தேர்தலில் பெண்களின் உரிமை : முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை | 25 Women Right In Parliamentary Elections

ஆனால் ஒற்றுமையின்மை காரணமாக தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையானது அரைவாசிக்கு மேல் குறைந்துள்ளது.

ஒற்றுமையில்லாத நிலையே இதற்கு காரணமாகவுள்ளது வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து தமிழர்களுக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்த வேண்டும்.

பெண்களின் பிரதிநிதித்துவம்

தங்களுக்குள் இருக்கின்ற வேறுபாடுகளை மறந்து இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கோருகின்றோம்.

அதேபோன்று நாடாளுமன்ற தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலில் பெண்களின் உரிமை : முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை | 25 Women Right In Parliamentary Elections

கட்சிகள் பேச்சளவிலேயே பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து பேசுகின்றனர் உளரீதியாக அவர்கள் பெண்களுக்கான பிரதிநித்துவத்தினை வழங்குவதை உறுதிப்படுத்துவதில்லை.

வெறுமனே பேச்சளவிலேயே உறுதிகூறுகின்றனர் எனவே வடகிழக்கில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியில் பெண்களின் அங்கத்துவத்தினை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றோம்” என தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.