முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

Bha Bha Ba: திரை விமர்சனம்

திலீப், மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகியுள்ள Bha Bha Ba காமெடி, ஆக்ஷ்ன் திரைப்படத்தின் விமர்சனத்தைப் பார்ப்போம் வாங்க.

Bha Bha Ba: திரை விமர்சனம் | Bha Bha Ba Movie Review

கதைக்களம்

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கேரள முதல்வர் ஜோசப் (பைஜூ சந்தோஷ்), தொண்டர்கள் முன் தோன்றி நலமாக இருப்பதாகவும் மாநாட்டில் கலந்துகொள்வதாகவும் அறிவிக்கிறார்.

அதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை கமிஷனர் தேவ்வும், அசிஸ்டன்ட் கமிஷனர் அஸ்கருக்கும் செய்கின்றனர்.

அங்கு தொண்டனாக வரும் திலீப் சிலருடன் பழகி முதல்வரை கடத்திச் செல்கிறார்.

Bha Bha Ba: திரை விமர்சனம் | Bha Bha Ba Movie Review

இதனால் மொத்த மாநிலமும் பரபரப்பாக, முதல்வரின் மகன் நோபல் தந்தையை காப்பாற்ற களத்தில் இறங்குகிறார்.

மறுபுறம் தனியாளாக முதல்வரை கடத்திச் செல்லும் திலீப்புடன் சரண்யா பொன்வண்ணனும் வழியில் இணைந்துகொள்கிறார்.

முதியவர்கள் இருக்கும் வித்தியாசமான இடத்திற்கு முதல்வரை கொண்டு செல்லும் திலீப், கேசட் ஒன்றை நோபிலுக்கு அனுப்பி சவால்விடுகிறார்.

Bha Bha Ba: திரை விமர்சனம் | Bha Bha Ba Movie Review

கடத்தப்பட்ட பயமில்லாத முதல்வர் ஜோசப், ஜாலியாக இருக்கும் திலீப்பிடம் ‘நான் தப்பிச் செல்ல வேண்டியதில்லை; நீ எப்படி கடத்தி வந்தாயோ அப்படியே கொண்டுசென்று விடும்படி செய்வேன்’ என்று சவால் விடுகிறார்.

திலீப் யார்? அவர் ஏன் முதல்வரை கடத்த வேண்டும்? அதன் பின்னர் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்

நடிகையின் வழக்கு தொடர்பான சர்ச்சையில் இருந்து வெளியே வந்த பின் திலீப் நடிப்பில் வெளியாகியுள்ள படம் இது.

காமெடி, ஆக்ஷன் படமாக இதனை அறிமுக இயக்குநர் தனன்ஜெய் ஷங்கர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

பயம் பக்தி பகுமானம் (மரியாதை) என்பதை சுருக்கி Bha Bha Ba என தலைப்பு வைத்துள்ளனர்.

ஒரு சாமானிய மனிதன் ஒரு மாநிலத்தின் முதல்வரை கடத்தி, தனக்கான கோரிக்கையை முன்வைக்கும் சீரியசான கதையை காமெடியாக கையாண்டுள்ளார்.

Bha Bha Ba: திரை விமர்சனம் | Bha Bha Ba Movie Review

அதனாலேயே படத்தின் ஆரம்பத்திலேயே No Logic; only Madness என பதிவிட்டு லாஜிக் எல்லாம் கேட்காம படத்தை பாருங்கள் என்கிறார் இயக்குநர்.

முதல் பாதியில் சஸ்பென்ஸ், காமெடி, ஆக்ஷனாக விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் கொஞ்சம் டல் அடிக்கத்தான் செய்கின்றது.

ஆனாலும், மோகன்லாலின் அறிமுகத்திற்கு பின் கலகலப்பாக படம் செல்கிறது.

திலீப் காமெடி, ஆக்ஷ்ன், டான்ஸ் என எல்லா ஏரியாவிலும் அசத்தியுள்ளார். ஒரு சில எமோஷனல் காட்சிகளிலும் நன்றாக ஸ்கோர் செய்துள்ளார்.

குறிப்பாக போலீசுடன் சண்டையிடும் காட்சியில் அதகளம் செய்துள்ளார். மேட்னஸ் கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருந்திப்போகிறார்.

Bha Bha Ba: திரை விமர்சனம் | Bha Bha Ba Movie Review

எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா?

எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள ‘சிறை’ திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா?

முதல்வராக பைஜூ சந்தோஷ் மிடுக்கான நடிப்பை தர, நோபிலாக வினீத் ஸ்ரீனிவாசன் நெகட்டிவ் ரோலில் மிரட்டுகிறார். தியான் ஸ்ரீனிவாசனும் அவரும் சந்திக்கும் இடம் தியேட்டரில் பிளாஸ்ட் ஆகிறது.

அவர்களை விட நம்ம டான்ஸ் மாஸ்டர் சாண்டிதான் அதிக கைத்தட்டல்களை பெறுகிறார். ஆரம்பத்தில் காமெடி செய்யும் அவர், ஒரு ஆக்ஷ்ன் காட்சியில் அடித்து நொறுக்குகிறார். கிட்டத்தட்ட இரண்டாவது ஹீரோவாகவே அவர் ஸ்கோர் செய்கிறார்.

சரண்யா பொன்வண்ணன், ரெடின் கிங்ஸ்லி, ரியாஸ் கான் ஆகியோரும் படத்தில் உள்ளனர். சலீம் குமார் ‘முகுந்தன் உன்னி ஒரிஜினல்’ என்று வினீத்திடமே கூறும் காட்சி சிரிப்பலை.

மோகன்லால் மாஸாக அறிமுகமாகி டான்ஸில் பட்டையை கிளப்பியுள்ளார். திலீப்பும் அவரும் சேர்ந்து ஆடும்போது திரையரங்கமே அதிர்கிறது.

Bha Bha Ba: திரை விமர்சனம் | Bha Bha Ba Movie Review

சாண்டியும் தனது பங்குக்கு அதில் குத்தாட்டம் போட்டு சிலிர்க்க வைக்கிறார்.

படத்தில் நம்ம தளபதி விஜய்யும் இருக்கிறார். அதாவது, படம் முழுக்கவே அவரது ரெபரென்ஸ்தான். தளபதி பாய்ஸ் தொடங்கி, அர்ஜுனரு வில்லு பாடல், கில்லி பாலா, கில்லி பிரதர்ஸ் என அவர் வியாபித்திருக்கிறார்.

சர்ப்பிரைஸாக ஒரு பெரிய தமிழ் நடிகர் கிளைமேக்சில் வருகிறார். அவர் தனக்கே உரிய பாணியில் காமெடி செய்து மோகன்லால், திலீப்பிடம் சவால்விட்டு இரண்டாவது பாகத்திற்கு லீட் கொடுத்துள்ளார்.

கலகலப்பாக படம் சென்றாலும் திலீப்பின் பிளாஷ்பேக் அந்த அளவிற்கு அழுத்தமாக இல்லை.

Bha Bha Ba: திரை விமர்சனம் | Bha Bha Ba Movie Review

என்னதான் நோ லாஜிக் என்று கூறினாலும், சில கேள்விகளை நம்மால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

மலையாளத்தில் பாலைய்யா படம் போன்ற ஒரு மாஸ் மசாலா முயற்சியை எடுத்துள்ள இயக்குநர், தனன்ஜெய் ஷங்கர் படம் என கார்த்திக் சுப்பராஜ் ரெபெரென்ஸையும் டைட்டிலில் வைத்துள்ளார்.

படத்தில் ஹீரோயினேயே இல்லை என்றாலும் அது ஒரு குறையாக தெரியவில்லை.

ஷான் ரஹ்மானின் பாடல்களும், கோபி சுந்தரின் பின்னணி இசையும் சிறப்பு. அர்மோவின் ஒளிப்பதிவு அருமை. ரஞ்சன் ஆப்ரஹாம் படத்தொகுப்பில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். 

க்ளாப்ஸ்

திலீப், மோகன்லால், சாண்டியின் நடிப்பு

ஆக்க்ஷன் காட்சிகள்

கிளைமேக்ஸ் சர்ப்பரைஸ்

பல்ப்ஸ்

இரண்டாம் பாதியின் தொய்வு

பிளாஷ்பேக்கை இன்னும் அழுத்தமாக வைத்திருக்கலாம்

மொத்தத்தில் இந்த Bha Bha Ba குறைகள் இருந்தாலும், ஒரு நல்ல என்டர்டைன்மெண்ட்தான். மலையாளத்தில் மசாலா ஆக்க்ஷன் படம் பார்க்க விரும்புபவர்களுக்கு ஒர்கவுட் ஆகும். 

Bha Bha Ba: திரை விமர்சனம் | Bha Bha Ba Movie Review

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.