அம்பாறையில் நாடாளுமன்ற தேர்தல் ஆசன விடயம் இழுபறியாக இருப்பதனால் நாங்கள்
மிகவும் தர்மசங்கடமான சூழ்நிலையில் இருக்கின்றோம் என மத்திய குழு உறுப்பினரும் அம்பாறை மாவட்ட குடிசார் அமைப்பு தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகியவற்றின் இணைப்பாளருமான இராசலிங்கம் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (09) இரவு இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணி
கடந்த ஜனாதிபதி
தேர்தலில் தேசத்தில் உள்ள தமிழ் மக்களை ஒன்று திரட்டுகின்ற பணியை சிறப்பாக
ஒன்றிணைத்து முடித்திருக்கின்றேன்.
அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் இன்று ஒரு ஆசனத்தை இழக்கக்கூடிய
சூழ்நிலை இருப்பதனால் இந்த அமைப்பு அம்பாறை மற்றும் திருகோணமலை
பிரதேசங்களின் நலன் கருதி செயற்பட வேண்டும் என்ற முடிவிற்கு
வந்திருந்தோம்.
அந்த வகையில் இரு வாரங்களாக தமிழ் தேசிய கட்சிகளை
ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம்.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள
7 கட்சிகளுடன் கலந்துரையாடி இருந்தோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,