முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழர் பகுதியில் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு

வவுனியா (Vavuniya) – ஓமந்தைப் (Omanthai) பகுதியில் மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினர் மீது மோதி தள்ளி தப்பிச் செல்ல முற்பட்ட போது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி, இருவரை கைது செய்துள்ளதாக ஓமந்தை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (13.10.2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா ஓமந்தை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சோதனை நடவடிக்கை

காவல்நிலைய பொருப்பதிகாரி ஜெயதிலக தலைமையில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் ஓமந்தையில் இருந்து மறவன்குளம் நோக்கி கடத்தப்பட்ட மரக்குத்திகளுடனான வாகனம் காவல்துறையினரால் வழிமறிக்கப்பட்டது.

தமிழர் பகுதியில் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு | Self Defense Firing By Police In Omanthai

இதன்போது, காவல்துறையினரை மோதி விட்டு மரக்குற்றிகளுடன் வாகனம் தப்பிச் செல்ல முற்பட்ட போது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து வாகனமும் அதில் இருந்த மரக்குற்றிகளும் மீட்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்