ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரை அரசியல் ரீதியாகப் பலிக்கடா ஆக்குவதற்காகவே அல்விஸ் தலைமையிலான குழுவை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நியமித்திருக்கலாம் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் (Malcolm Ranjith) சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கு முன்னர் குறிப்பிட்ட புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.என்.ஜே அல்விஸ் தலைமையில் குழுவொன்றை இந்த வருட ஆரம்பத்தில் நியமித்ததன் பின்னணி என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்தோடு, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க புதிய குழுவொன்றை நியமித்தமை சந்தேகத்திற்குரியது என்றும் கர்தினால் ரஞ்சித் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
திசை திருப்பும் ஒப்பந்தம்
இதேவேளை, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையை திசை திருப்புவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதாகத் தெரிகிறதாகவும் கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.
“உதய கம்மன்பில இவ்வளவு காலம் அமைதியாக இருந்து விட்டு, அவர் ஏன் இதை இப்போது வெளியே கொண்டு வருகிறார் என்றும் நாம் கேள்வி எழுப்புகிறோம்” என கர்தினால் மேலும் தெரிவித்துள்ளார்.