தேசிய மக்கள் சக்தியின் (NPP) பிரதி அமைச்சர்கள் எதிர்வரும் வியாழக்கிழமை (21) பதவியேற்கவுள்ளதாக கொழும்பு (colombo)ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
பிரதமர் மற்றும் ஏனைய முக்கிய அமைச்சர்களின் நியமனம் அடங்கிய புதிய அமைச்சரவை இன்று (18) ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இன்றைய அமைச்சரவை
இன்றைய அமைச்சரவை பதவியேற்பில் நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றார்.
அதேபோன்று பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கூடுதலாக கல்வி, தொழிற்கல்வி மற்றும் உயர் கல்வியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடற்றொழில் மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுக்களுக்கு தமிழர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.