முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சம்பந்தனுடைய மறைவு தமிழரசுக் கட்சியைப் பாதிக்கவில்லை : சிறீதரன் பகிரங்கம்

இரா. சம்பந்தனுடைய (R. Sampanthan) மறைவு தமிழரசுக் கட்சியைப் பாதிக்கவில்லை (ITAK) எனவும் இன்று தமிழரசுக்கட்சி 8 ஆசனங்களைப் பெற்றுள்ளது எனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையினுடைய தேர்தல் வரலாற்றில் அநுரகுமாரவின் (Anura Kumara Dissanayake) அரசு பெற்ற வெற்றி வரலாற்று சாதனையாகும். எனினும் தமிழ் தரப்பான எங்களுடைய வடக்கு மாகாணத்தில் சற்று வீழ்ச்சி அடைந்துள்ளது.

தமிழரசுக்கட்சி மீதான வெறுப்பு

மக்களிடம் இருக்கின்ற எங்கள் கட்சி மீதான கோபங்கள், எங்களிடம் இருந்த உள்ளகப் பிரச்சினைகளை மக்கள் ஜீரணிக்க முடியாமல் வெறுப்படைந்த நிலைமை, ஏதோ புதிய மாற்றங்கள் நடைபெறுவது போல மக்கள் எண்ணுவதுமே இதற்கு காரணங்களாகும்.

சம்பந்தனுடைய மறைவு தமிழரசுக் கட்சியைப் பாதிக்கவில்லை : சிறீதரன் பகிரங்கம் | Sampanthans Death Didnt Affect The Itak Sritharan

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தேசிய மக்கள் சக்தியின் (NPP)  உண்மை முகத்தைப் புரிந்துகொள்ளவில்லை. தென்னிலங்கையில் வந்த மாற்றம் இங்கேயும் ஏற்படும் என்ற ஏமாற்றம் சிலரிடம் இருந்திருக்கின்றது.

ஒரு இளம்தலைமுறை எங்களுடைய வரலாற்றை மறந்திருக்கின்றார்கள் அல்லது அரச உத்தியோகத்தராக இருப்பவர்கள் இது பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றது என நினைத்தார்கள்.

இந்த மாற்றங்களும் இலங்கைத் தமிழரசுக்கட்சி மீதான வெறுப்புமே இந்த வீழ்ச்சிக்கு காரணம்.

சம்பந்தனுடைய மறைவு என்பது தமிழரசுக் கட்சியைப் பாதிக்கவில்லை. இன்று அவர் இல்லாத நிலையிலும் திருகோணமலையில் வெற்றி பெற்றிருக்கின்றார்கள். அவர் இருந்த போது 6 ஆசனங்களைப் பெற்ற தமிழரசுக் கட்சி இன்று 8 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை – இந்திய ஒப்பந்தம்

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினுடைய (Indo-Sri Lanka Accord) ஒரு தரப்பு இந்தியா. தமிழர் தரப்பாக ஒப்பமிட்ட இந்தியாவிற்கு இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத்தரவேண்டிய தார்மீக கடமையும் பொறுப்பும் இருக்கின்றதல்லவா. இல்லையெனில் அந்த ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலக வேண்டும்.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் எழுதப்பட்ட போது இந்தியாவிற்கு எதிராக இந்தியாவின் பொருட்களுக்கு எதிராக இலங்கையிலே போராட்டம் நடத்தி, கடைகளைக் கொழுத்தி, பொருட்களைத் தடை செய்தவர்கள் இதே ஜேவிபி இதே தேசிய மக்கள் சக்தி தான்.

சம்பந்தனுடைய மறைவு தமிழரசுக் கட்சியைப் பாதிக்கவில்லை : சிறீதரன் பகிரங்கம் | Sampanthans Death Didnt Affect The Itak Sritharan

இப்போது பதவிக்கு வந்த இவர்களின் அடுத்த கட்ட நகர்வு இந்தியாவிற்கு எதிராக செயற்படப் போகின்றார்களா, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை இரத்து செய்யப் போகிறார்களா, 13ம் திருத்தம் உட்பட இந்தியாவால் கொண்டுவரப்பட்ட விடயங்களை நீக்கப் போகின்றார்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் இந்தியாவிற்கு இருக்கின்ற தார்மீக கடமையில் இருந்து இந்தியாவும் சற்று தள்ளியிருக்கின்றது என்பது தமிழ் மக்களின் ஆதங்கம்.

மக்கள் நிராகரித்தவர்கள் 

அபிவிருத்தி என்பதற்கு அப்பால் உரிமை சம்மந்தப்பட்ட தமிழ் மக்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு என்ற விடயத்தில் சரியான இலக்கை அடையவில்லை என்ற கோபம் தான் எங்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சியே தவிர அபிவிருத்திக்காக மக்கள் வாக்களிக்கவில்லை.

சம்பந்தனுடைய மறைவு தமிழரசுக் கட்சியைப் பாதிக்கவில்லை : சிறீதரன் பகிரங்கம் | Sampanthans Death Didnt Affect The Itak Sritharan

வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய அரசியலுக்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று சொல்ல முடியாது. இலங்கையின் வரலாற்றில் பலர் அமைச்சர்களாக இருந்துள்ளார்கள். மக்கள் இன்று அவர்களை நிராகரித்துள்ளார்கள். இதற்கு காரணம் எங்களுக்கு அமைச்சு தேவையில்லை. மக்களுடைய தமிழ் தேசிய உரிமை தான் தேவை. அதனை இன்று நிரூபித்துள்ளார்கள்.

வடக்கு மாகாணத்தில் ஆசனக் குறைவு ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் வாக்குகளில் சிதைவோ வீழ்ச்சியோ பெருமளவில் ஏற்படவில்லை. எங்களுடைய ஒற்றுமைக் குலைவினால் பல கட்சிகளாக பிரிந்து போட்டியிட்ட காரணத்தால் வாக்குகள் சிதறியுள்ள நிலையில் எதிர்தரப்புக்கான வாய்ப்பை கொடுத்திருக்கின்றது.

அதனைத் தாண்டி நாங்கள் வெற்றி பெற்றிருக்கின்றோம். நீண்ட காலத்திற்கு பிறகு இலங்கைத் தமிழரசுக் கட்சி தனிக் கட்சியாக போட்டியிட்டு 8 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது“ என தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.