சரிகமப சீசன் 5
சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியின் பைனல் பிரம்மாண்டத்தின் உச்சமாக நிறைய இன்ப அதிர்ச்சி தரும் விஷயங்களுடன் முடிவுக்கு வந்தது.
இந்த 5வது சீசனின் பைனலிஸ்ட்டாக ஆறாவதாகத் தேர்வானவர் தான் போட்டியாளர் பவித்ரா. போட்டி போட்ட போட்டியாளர்களில் பவித்ராவுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது, காரணம் இறந்த தனது கணவருக்காக இந்த மேடை ஏறியவர்.

திருமணமாகி கொஞ்ச நாளில் தனது மகளின் பிறந்தநாளுக்கு ஆடை வாங்கிக்கொண்டு வரும்போது விபத்து ஏற்பட்டு இறந்து இருக்கிறார்.
தனது பாடல் திறமைக்கு கணவர் மிகவும் உறுதுணையாக இருந்து ஊக்கப்படுத்தியதை நிகழ்ச்சியில் உணர்ச்சிப்பூர்வமாக பேச அனைவரையும் கண்கலங்க வைத்தது.

புதிய கார் வாங்கியுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகர் பாண்டியன்… மனைவியுடன் வெளியிட்ட வீடியோ இதோ
கணவர் சமாதி
பவித்ரா இறுதி சுற்றுக்கு தேர்வு ஆனதும் தனது ஊருக்குச் சென்றிருந்தார்.
தனது கணவர் கல்லறைக்குச் சென்று அங்கே தனக்கு 6வது இறுதிச் சுற்றுப் போட்டியாளருக்கு அணிவித்த கிரீடத்தைக் கல்லறையில் வைத்து கணவரை வணங்கியுள்ளார்.
தற்போது பிரம்மாண்டமான சரிகமப சீசன் 5 இறுதிப் போட்டியில் அவருக்கு People’s Favourite விருது கொடுக்கப்பட்டுள்ளது.


