முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தொடர்பான வழக்கு : வாக்குமூலம் வழங்காத பிரதியமைச்சர்

Courtesy: Sivaa Mayuri

புதிய வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தொடர்பான வழக்கு குறித்து, பல தொலைபேசி அழைப்புகள் மற்றும் கடிதங்கள் அனுப்பப்பட்ட போதிலும், இரண்டு சாட்சிகள், இதுவரை வாக்குமூலம் வழங்கவில்லை என பொலிஸார் கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் புதிய அரசாங்கத்தில் பிரதியமைச்சராக பதவி வகிப்பதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மோசடி விசாரணைப் பணியகம் 

தேசிய தொழிலாளர் நிறுவகத்திற்கு சொந்தமான இரண்டு மாடி கட்டிடத்துடன் கூடிய தெஹிவளை சொத்தை குத்தகைக்கு வழங்குவதற்கு, வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, போலி பத்திரத்தை பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் மோசடி விசாரணைப் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தொடர்பான வழக்கு : வாக்குமூலம் வழங்காத பிரதியமைச்சர் | Case Trade Minister Wasantha Fails Give Statement

இது தொடர்பில், பிரதி தொழிலாளர் அமைச்சரும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளருமான மஹிந்த ஜயசிங்க மற்றும் இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் ஆகியோருக்கு தாம் அழைப்பு விடுத்து கடிதங்களை அனுப்பியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர். 

பத்திரத்தில் அவர்கள் நிலத்தை 3.6 மில்லியன் ரூபாய்க்கு குத்தகைக்கு எடுத்ததாகப் பட்டியலிடப்பட்டிருப்பதால் அவர்களின் வாக்குமூலம் கோரப்பட்டது.

எனினும் அவர்கள் இன்னும் வாக்குமூலம் வழங்கவில்லை என்று பொலிஸார் மன்றில் தெரிவித்துள்ளனர்

வழக்கின் விசாரணை

2020 பெப்ரவரி 10 ஆம் திகதி முதல் மூன்று வரிப் பத்திரங்கள் மூலம் ஜயசிங்க.ஜெயலால் ஆகியோருக்கு சமரசிங்க மற்றும் சிறில் அபயசிறி ஆகியோரால் சொத்துக்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் பதில் நீதவான் தரங்க சில்வாவிடம் தெரிவித்தனர்.

வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தொடர்பான வழக்கு : வாக்குமூலம் வழங்காத பிரதியமைச்சர் | Case Trade Minister Wasantha Fails Give Statement

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, தொழிற்சங்கத்திற்குள் அதிகாரம் இல்லாத ஒருவரால் இந்த சொத்து குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கின் விசாரணையை டிசம்பர் 20ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய திகதியில் வழக்கின் முன்னேற்றத்தை தெரிவிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.