முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவின்(Mahinda Deshapriya) வீட்டில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகிந்த தேசப்பிரியவின் அம்பலாங்கொடையில் அமைந்துள்ள வீட்டிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மகிந்த தேசப்பிரியவின் மனைவி அம்பலாங்கொடை காவல்நிலையத்தில் நேற்று(23.11.2024) முறைப்பாடு செய்துள்ளார்.
கொள்ளைச் சம்பவம்
இதன்போது, சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இரண்டு எரிவாயு கொள்கலன்கள், ஒரு தொலைக்காட்சி, இரண்டு தங்க நகைகள் மற்றும் நான்கு கைக்கடிகாரங்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் வசித்துவரும் மகிந்த தேசப்பிரியவும் அவரது மனைவியும் நேற்றைய தினம்(23) அம்பலாங்கொடையிலுள்ள தங்களது வீட்டிற்குச் சென்றிருந்தபோது, இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.