முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவிக்க சிறிநேசன் எம்.பி அரசிடம் கோரிக்கை

தமிழ்
மக்களின் விடிவுக்காக போராடிய மாவீரர்களின் துயிலும் இல்லத்தினை
விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக
மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்
தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்கள் இம்முறை தமது உறவுகளை நினைவு கூருவதற்கான கெடுபிடிகள் இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்
ஞா.சிறிநேசன் இன்றைய தினம் மட்டக்களப்பின் மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியதுடன் அங்கு
முன்னெடுக்கப்படும் ஏற்பாடுகளையும் பார்வையிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் விடுதலை

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மாவீரர்களின் எண்ணங்களை மனதில் சுமந்தவாறு அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்
எண்ணத்துடன் பொதுமக்கள் மாவடி முன்மாரிய மாவீரர் துயிலும் இல்லத்தில்
சிரமதானங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவிக்க சிறிநேசன் எம்.பி அரசிடம் கோரிக்கை | Maaveer Naal Remembrance Day In Batticaloa

எமது மண்ணுக்காக, தமிழ் மக்களின் விடுதலைக்காக தமிழர்கள் இந்த மண்ணில்
நிம்மதியாக சுதந்திரக்காற்றினை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக தமது உயிரை
அர்ப்பணித்த தியாகதன்மை கொண்ட போராளிகளை நாங்கள் என்றும் மறக்ககூடாது.

அவர்களை
மறப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
அந்த வகையில் 2024ஆம் ஆண்டில் கார்த்திகை மாதம் பிறந்துள்ளது.

அந்த மாதம்
என்பது தமிழர்களினைப் பொறுத்த வரையில் அந்த தியாகத்தினை நினைவுகூரும்
மாதமாகவுள்ளது. அந்த வகையில் இந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் அவர்களின்
நினைவினை சுமந்தவாறு நின்றுகொண்டிருக்கின்றோம்.

விசேட அதிரடிப்படையினரின் முகாம்

இதேபோன்று தாண்டியடி, தரவை, கண்டலடி போன்ற இடங்களிலும் துயிலும் இல்லங்கள்
காணப்படுகின்றன. இதில் தாண்டியது துயிலும் இல்லம் விசேட அதிரடிப்படையினரின்
முகாமாகவுள்ளது.

மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவிக்க சிறிநேசன் எம்.பி அரசிடம் கோரிக்கை | Maaveer Naal Remembrance Day In Batticaloa

ஜனநாயக ஆட்சி நடக்கின்ற
காலத்தில் துயிலும் இல்லத்தினை இலங்கை இராணுவத்தினர் ஆக்கிரமித்து அதில்
முகாம் அமைத்து சப்பாத்துகால்களின் கீழ் எமது உறவுகளின் சமாதியை
தீண்டிக் கொண்டிருப்பது ஒரு அசிங்கமான செயற்பாடு.

முகாமிலிருந்து அவர்கள்
அகற்றப்படவேண்டும் என்று நாங்கள் கோரியிருந்தோம். அகற்றுவோம் என்று சொன்னார்கள்
இன்னும் அகற்றப்படவில்லை.

மாவடி முன்மாரியில் உள்ள மாவீரர் துயிலும் உள்ளத்திலிருந்த கல்லறைகள்
அகற்றப்பட்டிருந்தாலும் இம்முறை இங்கு ஓரளவு சுதந்திரமாக நினைவேந்தலை
செய்யக்கூடிய நிலைமைகள் ஏற்பட்டுள்ளது.

ஒரு விடிவுக்காக போராடியவர்களை நாங்கள்
மலினப்படுத்தாமல் அவர்களின் மகத்துவத்தினை நாங்கள் நெஞ்சில் சுமக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவிக்க சிறிநேசன் எம்.பி அரசிடம் கோரிக்கை | Maaveer Naal Remembrance Day In Batticaloa

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.