முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கடற்றொழிலாளர்களை நேரில் சந்திப்பது பல பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு வழிவகுக்கும்!

கடற்றொழிலாளர்களை நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை. அது இடம்பெறுமாயின் பல
பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின்
யாழ். துணைத்தூதுவர் சாய் முரளி தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பெரும் பங்களிப்புடன் மிஸ்பா ஜெப
மிஷனரி ஆலயத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு
முள்ளியவளையில் இடம்பெற்ற நத்தார் பெருவிழாவில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இந்திய மக்கள் சார்பாக மிஸ்பா ஜெப மிஷனரி ஆலய மாணவர்களுக்கு இந்திய மக்கள்
சார்பாக கலந்து கொண்டு உதவித்திட்டங்களை வழங்குவதில் பெருமையடைகிறேன்.

இந்திய – இலங்கை உறவு 

இந்திய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பல திட்டங்களில் குறிப்பாக வடக்கு,
கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களுக்கு ஆதரவாக மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம்,
கிழக்கு பல்கலைக்கழகம் சம்பந்தமான திட்டங்களும் அண்மையில்
ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

கடற்றொழிலாளர்களை நேரில் சந்திப்பது பல பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு வழிவகுக்கும்! | Gov Must See Fishermen And Solve Their Problems

இன்றையதினம் இலங்கை ஜனாதிபதி இந்தியா பயணிக்கின்றார். அங்கு தங்கியிருந்து
இலங்கை சம்பந்தமான பல திட்டங்கள் தொடர்பான அறிவிப்பை எதிர்பார்க்கலாம். அதில்
குறிப்பாக வடக்கு – கிழக்கு மாகாணங்கள் சேர்ந்த பல திட்டங்கள்
எதிர்பார்க்கப்படுகின்றன.

ஏற்கனவே, குறிப்பிட்டது போல இது ஒரு ஆரம்பம்தான் எதிர்காலத்தில் பல விடயங்களோடு
சேர்ந்து பயணிப்போம்.

ஒக்டோபர் மாதம் இறுதியில் பெரியளவிலான கூட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

அதில்
இலங்கை தொடர்பான அதிகாரிகள் சந்தித்திருக்கிறார்கள். ஆனால் கடற்றொழிலாளர்களை நேரில்
சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை. அது இடம்பெறுமாயின் பல பிரச்சினைகளுக்கு
தீர்வு காண முடியும்” என கூறியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.