முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன? இலங்கை கடற்றொழிலாளர்கள் கேள்வி!

இந்திய – இலங்கை கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட இழுவைமடி வலைகளின் பாவனையை
படிப்படியாக குறைக்க தாங்கள் திறந்த மனதுடன் இருப்பதாக தமிழக கடற்றொழிலாளர்கள் கூறுவதை ஒரு ஏமாற்று வேலை என கூறி அந்த வாக்குறுதியை இலங்கை தரப்பினர் நிராகரித்துள்ளனர்.

தொடர்ந்து பல தசாபதங்களாக பாக்கு நீரணைப் பகுதியில் இருநாட்டு கடற்றொழிலாளர்களுக்கும் இடையே தொடர்ந்து பிரச்சினைகள் நிலவி வரும் நிலையில், இந்திய விஜயத்தில்
ஈடுபட்டிருந்த ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க, இந்தியப் பிரதமருடன் இது
குறித்து உரையாடியிருந்தார்.

பொருளாதார கூட்டுறவு, பாதுகாப்பு அம்சங்கள், தொழில் வளர்ச்சி, முதலீடு
ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு இருநாட்டு தலைவர்களின் சந்திப்பில் கடற்றொழிலாளர்களின் பிரச்சினையும் முக்கியமாக பேசப்பட்டதாக இருதரப்பும் தெரிவித்துள்ளது.

மனிதாபிமான பிரச்சினை

“கடற்றொழிலாளர்கள் பிரச்சினை மனிதாபிமான அடிப்படையில் கையாளப்பட வேண்டும் என்பது
குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்” என இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அநுரகுமார திஸநாயக்கவுடன் கூட்டாக இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில்
தெரிவித்தார்.

இதேவேளை அநுர தமது எக்ஸ் சமூக வலைதளத்தில், தம்மிடையேயான உரையாடலில்,
“சட்டவிரோத கடற்றொழிலை நிறுத்துவது” குறித்தும் பேசப்பட்டதாக பதிவிட்டுள்ளார்.

மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன? இலங்கை கடற்றொழிலாளர்கள் கேள்வி! | Dispute In The Indian Sri Lankan Maritime Area

மேலும் இந்திய பிரதமருடன் கூட்டாக பேசும் போது, பாக்கு நீரிணைப் பகுதியில்,
சட்டவிரோத தொழில் முறைகள் மூலம் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது
என்ற தமது கவலையை வெளிப்படுத்தினார்.

”கடற்றொழிலாளர்களின் விடயம் குறித்த ஆறாவது கூட்டம் அண்மையில் முடிவடைந்ததை வரவேற்ற
நாங்கள், அவர்களின் பிரச்சினையை தீர்பதற்கு கூட்டு அணுகுமுறையின் மூலம்
நீடித்திருக்கும் வகையில் அணுக வேண்டும் என்பதையும் நாம் கலந்துரையாடினோம்.

சீர் செய்ய முடியாத வகையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், இரு
நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ள இழுவைமடி வலையை பயன்படுத்தப்படுவதை உணர்ந்து,
உடனடியாக அந்த நடைமுறை நிறுத்தப்பட வேண்டும் என நான் வேண்டுகோள் விடுத்தேன்” என அநுர விளக்கியுள்ளார்.

கடற்றொழிலாளர்கள் திருப்தி

எனினும், இந்திய தரப்பிலிருந்து வெளியான இந்த கருத்து இலங்கை வடக்கு மாகாண
கடற்றொழிலாளர்கள் திருப்தியடையவில்லை.

“மனிதாபிமான வழிகள் என்றால் என்ன”? என வடக்கு மாகாண மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களின் கூட்டுறவுச் சங்க சமாசத்தின் செயலாளரும், வட
மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளருமாக மொஹமட் ஆலம் கேள்வி
எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 

மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன? இலங்கை கடற்றொழிலாளர்கள் கேள்வி! | Dispute In The Indian Sri Lankan Maritime Area

“மனிதாபிமானம் என்பது யாருக்குரியது? அதாவது இந்திய கடற்றொழிலாளர்களை மனிதாபிமானமாக
பார்க்கச் சொல்கிறாரா? அல்லது வடக்கு பகுதியில் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களின் மனிதாபிமானத்துடன் பார்க்கச் சொல்கிறாரா?

உண்மையில் மனிதாபிமானத்துடன் வட
பகுதி கடற்றொழிலாளர்களையே பார்க்க வேண்டும். வாழ்வாதாரத்தாலும், தொழில்
உபகரணத்தாலும், இயற்கை சீற்றங்களின்போதும் பாதிக்கப்பட்டவர்கள் வடக்கு பகுதி
கடற்றொழிலாளர்கள்.

பிரதமர் தரப்பு

கோரிக்கை வைக்கும் பிரதமர் தரப்பில் இருந்து பார்த்தால், அவர் கைது
நடவடிக்கைகளை நிறுத்துங்கள். அல்லது கைது செய்யப்பட்ட படகுகளை விடுவியுங்கள்.
மீனவர்களை விடுவியுங்கள்.

எங்களது கடற்றொழிலாளர்கள் வந்து உங்கள் கடல் பரப்பில்
தொழில் செய்ய அனுமதியுங்கள் என்றுதான் அவர் கூறுகிறார்.

காரணம் அவர் அவர்
நாட்டு மக்கள் தொடர்பில்தானே பேசுவார். பாதிக்கப்பட்ட மக்களிடம் மனிதாபிமான
கோரிக்கையை வைப்பது வேடிக்கையாக இருக்கின்றது.

மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன? இலங்கை கடற்றொழிலாளர்கள் கேள்வி! | Dispute In The Indian Sri Lankan Maritime Area

ஆனால், வட மாகாண கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து தாங்கள் முழுமையாக
உணர்ந்துள்ளதாகவும், அவர்களின் கவலைகளை பகிர்ந்துகொள்வதாகவும் ஜேசுராஜா
கூறுகிறார்.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாங்கள் மதிக்கிறோம். அதை
அங்கீகரிக்கிறோம்.

அவர்களின் வாழ்வாதாரத்தை நாங்கள் எந்த வகையிலும்
பாதிப்படையச் செய்யமாட்டோம். தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை குறைக்க
நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஆனால் அதற்கு கால அவகாசமும், தமிழக மற்றும்
இந்திய அரசுகளிடமிருந்து மாற்று ஆதரவும் தேவை. இரு தரப்பும் கைது செய்த
கடற்றொழிலாளர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க வேண்டுமென்று நாங்கள்
கேட்டுக்கொள்கிறோம்.

இரு தரப்பு கடற்றொழிலாளர்களும் நேருக்கு நேர் சந்தித்து
உரையாடுவது சுமுகமான தீர்வுக்கு வழி வகுக்கும்” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.