புஷ்பா 2
நடிகர் அல்லு அர்ஜுனின் திரை வாழ்க்கையில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் செய்யாத வசூல் சாதனையை புஷ்பா 2 படம் செய்து வருகிறது.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா 2 மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. கலவையான விமர்சனங்கள் படத்தின் மீது இருந்தாலும் கூட, வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது.
அமரன் ஹிட்.. சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்திய சிவகார்த்திகேயன்! எத்தனை கோடி பாருங்க
பாக்ஸ் ஆபிஸ்
6 நாட்களில் உலகளவில் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து, இதுவரை இந்திய சினிமாவில் வெளிவந்த எந்த படமும் செய்யாத சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், 15 நாட்களை கடந்துள்ள புஷ்பா 2 உலகலவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி. இப்படம் உலகளவில் 15 நாட்களில் ரூ. 1475 கோடி வசூல் செய்துள்ளது.