முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மக்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை! அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

சர்வதேச ரீதியாக எந்த அங்கீகாரம் கிடைத்தாலும் மக்களின் பிரச்சினைகள் இன்னமும்
தீர்க்கப்படவில்லை என நாங்கள் நினைக்கின்றோம். ஆகவே 2025 ஆம் ஆண்டு பிரதான
வேலைத்திட்டமாக கிராமிய பொருளாதாரங்களை வளர்ச்சிக்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி
அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

வீழ்ச்சி அடைந்த பொருளாதார முறைமைக்கு எதிராக புதியதொரு பொருளாதார கொள்கையை
அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக மக்களின் கருத்துகளை அறியும்
வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அலுவலகம் நேற்று மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டம் உட்பட நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட மக்களும் இணைந்து
மூன்றில் இரண்டு பெரும்பான்மை தளத்தை எங்களுக்கு தந்திருக்கின்றார்கள்.
இந்த நாட்டு மக்கள் முக்கியமான ஒரு வரத்தை எங்களுக்கு வழங்கி
இருக்கின்றார்கள், கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகளை
வழங்குவதற்காக எங்களுக்கு அதிகாரத்தை வழங்கி இருக்கின்றார்கள்.

மக்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை! அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி | Sri Lanka New Governmet Decision

ஜனாதிபதி உட்பட அமைச்சராக தெரிவு செய்யப்பட்ட நாங்களும் மக்கள் வழங்கிய வரப்பிரசாதத்தின் பெறுமதியை தெரிந்திருக்கின்றோம். இந்த மக்கள் வரமானது
இனவாதத்திற்கு எதிராக வழங்கப்பட்ட மக்கள் வரம். மக்கள் வழங்கிய இந்த ஆணை
ஊழலுக்கு எதிராக வழங்கிய ஆணை. உலக நாடுகள் மத்தியில் எமது நாட்டிற்கு ஏற்பட்ட
அசௌகரியங்களை தடுப்பதற்காக மக்கள் வழங்கிய இந்த ஆணை.

உங்களுக்கு தெரியும் நாங்கள் அனைவரும் கடந்த காலத்தில் பொருளாதார வீழ்ச்சியை
எதிர்நோக்கினோம். எங்களுக்கு கிடைக்கப்பெற்றது ஒரு பொருளாதார வீழ்ச்சி அடைந்த
நாடு. மக்களுக்கு பொருளாதார ரீதியாக வீழ்ச்சி அடைந்த நாட்டையே எங்களுக்கு
கையளித்தார்கள்.

மக்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை! அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி | Sri Lanka New Governmet Decision

மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருக்கின்ற கடதாசி உற்பத்தி சாலை உட்பட இந்த
நாட்டில் இருக்கின்ற தொழிற்சாலைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்ற ஒரு
ஊழல் நிறைந்த ஆட்சியை தான் எங்களிடம் கையளித்தார்கள்.
நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம் மக்களின் அயராத உழைப்பும் அயராத தியாகத்தின்
காரணமாக தற்போது பொருளாதாரத்தில் நாங்கள் அபிவிருத்தியை நோக்கி செல்லக்கூடிய
விதத்தில் இருக்கின்றோம்.

பிச் ரேட்டிங் நிறுவனத்தின் மூலம் தொடர்ச்சியாக இந்த நாடு வந்திருத்து அடைந்த
நாடு அல்ல அபிவிருத்தி ரீதியாக முன்னோக்கிச் செல்லுகின்ற நாடு என்கின்ற
வகையில் அவர்கள் எங்களை அங்கீகரித்திருக்கின்றார்கள்.
பொருளாதார ரீதியாக வீழ்ச்சி அடைந்து இருக்கின்றோம் என கூறிய
எதிர்க்கட்சியினரின் கருத்துக்களை மழுங்கடிக்க கூடிய வகையில் தற்போது
பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்து வருகின்றோம் என்பதனை தற்போது
காணக்கூடியதாக இருக்கின்றது.

மக்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை! அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி | Sri Lanka New Governmet Decision

சர்வதேச ரீதியாக எந்த அங்கீகாரம் கிடைத்தாலும் மக்களின் பிரச்சினைகள் இன்னமும்
தீர்க்கப்படவில்லை என நாங்கள் நினைக்கின்றோம். ஆகவே 2025 ஆம் ஆண்டு பிரதான
வேலையாக இருக்கின்றது கிராமிய மட்ட கிராமிய பொருளாதாரங்களை வளர்ச்சி செய்வது
எமது பிரதான வேலை திட்டமாக காணப்படுகின்றது.

இந்த அரசாங்கத்தால் கிராமிய மட்டத்தில் சுவையான ஒதுக்கீடுகளை செய்த போதும்
கிராமிய மட்டத்தில் இருக்கின்ற மக்களின் பிரச்சினைகள் தீர்வதாக இல்லை
அவர்களுக்கு இந்த ஒதுக்கீடு போய் சேராத காரணமாக காணப்படுகிறது. இதனால் மக்களின்
ஏழ்மைத்தனம் வேலை இல்லாத பிரச்சினை மக்களின் வாழ்வாதார நெருக்கடிகள் என்பது
அதிகரித்து காணப்படுகின்றது.

பொருளாதார வீழ்ச்சி காரணமாக இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறிக்
கொண்டிருக்கின்றார்கள். ஆகவே அந்த பிரச்சினைகள் இன்னமும் தீர்ந்ததாக எங்களுக்கு
தெரியவில்லை.
ஆகவே வீழ்ச்சி அடைந்த பொருளாதார முறைமைக்கு எதிராக புதியதொரு பொருளாதார
கொள்கையை அமைப்பதற்கு உத்தேசித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.