முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் படையினரின் கட்டுப்பாட்டில் 36 வீத காணிகள் – சிவஞானம் சிறீதரன்

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் நகரத் திட்டமிடலுக்குரிய காணிகளில் 36 வீதமானவை போர் முடிவுற்ற 14 ஆண்டுகளின் பின்னரும் இராணுவத்தினரால் விடுவிக்கப்படாமல் உள்ளதனால் மாவட்டத்தின் அபிவிருத்தியில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi ) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று (26.12.2024) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) இதனைச் சுட்டிக் காட்டினார்.

அபிவிருத்தியில் பாரிய பின்னடைவு

அவர் மேலும் தெரிவிக்கையில் “கிளிநொச்சி மாவட்ட செயலகவளகம் கலாசார மண்டபம் அமைக்கப்பட்டிருந்த
காணி கிளிநொச்சி மத்திய கல்லூரியின் பயன்பாட்டுக்கு உகந்த சந்திரன் பூங்கா இருந்த காணி உள்ளிட்ட நகர்ப்புறக்
காணிகள் பலவற்றை இன்றளவும் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர். 

கிளிநொச்சியில் படையினரின் கட்டுப்பாட்டில் 36 வீத காணிகள் - சிவஞானம் சிறீதரன் | Military Occupation Of Land In Northern Province

அதேவேளை நகரின் முதன்மைப் பாடசாலைகளுள் ஒன்றான கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் மைதானத்திற்கான பாதையை விடுவிக்குமாறு கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட சமநேரத்தில் கடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் அது
தொடர்பில் ஆராயப்பட்டிருந்தது.   

மதுபானசாலைகளை மூடும் தீர்மானம்

441 ஏக்கர் விஸ்தீரணம் உடைய வட்டக்கச்சி அரசினர் விவசாய பண்ணையின்
410 ஏக்கர் காணி தற்போது வரையில் இராணுவத்தின் வசமுள்ளது. 

கிளிநொச்சியில் படையினரின் கட்டுப்பாட்டில் 36 வீத காணிகள் - சிவஞானம் சிறீதரன் | Military Occupation Of Land In Northern Province

இதனை விவசாயத் திணைக்களத்திடம் கையளிக்கும் பட்சத்தில் இந்த மாவட்டத்தின் நூற்றுக்கணக்கானோருக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும் என்பதால்
பொதுப்பயன்பாட்டுத் தேவைகளுக்குரிய காணிகளை இராணுவத்திடமிருந்து விடுவிக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
 
மக்களின் இயல்பு வாழ்வை பாதிக்கும் வகையில் அமைவிடத்தைக் கொண்டுள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் பொதுப்பயன்பாட்டு நிறுவனங்களை அண்மித்தும் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலைகளை மூடுவதென்ற தீர்மானத்தை நிறைவேற்றி
அதன் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.