ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayaka) நாளை(15) சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை சந்திக்கவுள்ளார்.
இருதரப்பு பேச்சுவார்த்தை
சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாளை (15) பிற்பகல் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை(Xi Jinping) சீன மக்கள் மண்டபத்தில் வைத்து சந்திக்கவுள்ளார்.
இலங்கை ஜனாதிபதிக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் பின்னர் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.