யாழ்ப்பாணம் (Jaffna) – வடமராட்சி கிழக்கு பகுதியில் மர்ம வீடு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த மர்ம வீடு யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இன்று (15.1.2025) அதிகாலை 3 மணி அளவில் மீட்கப்பட்டுள்ளது
அண்மைக்காலமாக கடல் நிலையில் மாற்றங்களினால் கடல் சீற்றங்கள், சூறாவளி, புயல், நிலநடுக்கம் போன்றவை பல தென்கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டது.
பல மரபு அம்சங்கள்
இதன்போது மியன்மார், தாய்வான், தாய்லாந்து, மலேஷியா, இந்தியா, போன்ற ஏதாவது ஒரு நாட்டில் இருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
குறித்த வீட்டில் பௌத்த சமயத்தினை தாங்கிய பல மரபு அம்சங்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது.
குறித்த வீட்டினை பார்வையிடுவதற்கு பல மக்கள் சென்றவண்ணமுள்ளனர்.
இதேதேளை யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, வத்திராயன் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை ஆகிய இரு தெய்வங்களும் இணைந்த சிலை ஒன்று கரையொதுங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் – கஜிந்தன்
https://www.youtube.com/embed/t71JO2WKRoA