நடிகர்களுக்குள் போட்டி இருப்பது போல, நடிகைகளுக்கு நடுவிலும் போட்டி இருந்து கொண்டு தான் இருக்கிறது.
யார் நம்பர் 1 ஹீரோயின் என்கிற விவாதமும் அவ்வப்போது வருவதும் உண்டு. நடிகைகள் நடித்த படங்களின் வசூல் தான் அதை தீர்மானிக்கிறது.
பிக் பாஸ் சென்று வந்தபின் தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன்.. முக்கிய பிரபலம் பேச்சால் அதிர்ச்சி
3000 கோடி வசூல்.. கலக்கும் ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா தான் எல்லோரையும் பின்னுக்கு தள்ளி டாப் ஹீரோயினாக இருக்கிறார். அவர் கடைசியாக நடித்த மூன்று படங்கள் இதுவரை 3000 கோடிக்கும் மேல் வசூலித்து இருக்கின்றன.
விஜய் உடன் அவர் நடித்த வாரிசு படம் 300 கோடிக்கும் மேல் வசூலித்தது. அதன் பின் ஹிந்தியில் நுழைந்த ராஷ்மிகா அனிமல் என்ற படத்தில் தாராள கிளாமர் காட்டி நடித்தார். அந்த படம் 1000 கோடி வசூலித்தது.
அடுத்து அவர் நடித்த புஷ்பா 2 படம் 1850 கோடிக்கும் மேல் வசூலித்து இருக்கிறது. தற்போதும் சில இடங்களில் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதன் மூலம் ராஷ்மிகா கடந்த சில படங்களில் 3000 கோடிக்கும் மேல் வசூல் வந்திருக்கிறது. அவர் தான் நம்பர் 1 ஹீரோயின் என அவரது ரசிகர்களும் தற்போது பேச தொடங்கி இருக்கின்றனர்.