கேம் சேஞ்சர்
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ஒரு படம் வெளிவருகிறது என்றால், கண்டிப்பாக அப்படம் வசூலில் மாபெரும் அளவில் சாதனைகளை படைக்கும்.
ஆனால், சமீபகாலமாக ஷங்கர் இயக்கிய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வசூலில் வரவேற்பை பெறவில்லை. இந்தியன் 2 படம் கடந்த ஆண்டு தோல்வியை சந்தித்த நிலையில், இந்த ஆண்டு கேம் சேஞ்சர் படமும் மாபெரும் தோல்வியை சந்தித்துள்ளது.
இதுவரை பிக் பாஸ் டைட்டில் வென்ற போட்டியாளர்கள்.. லிஸ்ட் இதோ
பல கோடி நஷ்டம்
உலகளவில் கேம் சேஞ்சர் திரைப்படம் ரூ. 194 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் தயாரிப்பாளருக்கு ரூ. 100 கோடிக்கும் மேல் நஷ்டம் என கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.
இயக்குநர் ஷங்கரின் இந்த தொடர் தோல்வியை, கண்டிப்பாக இந்தியன் 3 திரைப்படம் மாற்றி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.