ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பொறுப்பெற்று சில மாதங்கள் கடந்துள்ள நிலையில் நாட்டில் மாற்றங்கள் பெரிதாக இடம்பெறவில்லை என ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தியினரால் முன்வைக்கப்பட்ட யோசனைகளில் ஒன்றாக அடிப்படை கட்டமைப்புக்களில் பாரியளவிலான மாற்றத்தை கொண்டு வருவோம் என்பதே ஆகும்.
ஆனால், அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்று காலங்கள் கடந்துள்ள நிலையில் பாரிய மாற்றங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. அதற்கான சிறிய முன்னேற்றம் கூட ஆரம்பிக்கப்படவில்லை.
அநுர அரசாங்கத்தை பொறுத்தவரையில் திட்டங்கள் அனைத்தையும் மிகவும் ஆறுதலாக முன்னெடுப்பதற்குத்தான் திட்டமிட்டு இருக்கிறார்கள் என தோன்றுகின்றது என அமெரிக்க சாஸ்பரி பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையின் பேராசிரியர் கலாநிதி கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தற்போதைய போக்கும் அவர்கள் தொடர்பில் மக்கள் கொண்டுள்ள பல விடயங்களை விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி…

