பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் மாற்றத்தை நோக்கி மக்களால் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.
அதிலிருந்தே அவர் தேர்தல் மேடைகளில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்ற எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவுகின்றது.
ஆனால் இன்று அந்த வாக்குறுதிகளுக்கு மாறாக அநுர செயற்படுவதாக மக்கள் தங்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில், அநுர அரசு முடிவுகளை எடுப்பதில் தீவிரம் காட்டாமைக்கு காரணம் என்ன?
மீண்டும் இலங்கையில் பெரும் முடக்கம் ஏற்படுமா? போன்ற விடயங்கள்
குறித்து ஊடறுப்பு நிகழ்வில் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.
இந்நேரலையானது இலங்கை நேரப்படி இரவு 09.00 மணிக்கும், பிரித்தானிய நேரப்படி மாலை 3.30 மணிக்கும் ஒளிபரப்பாகின்றது…