சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் கைவசம் தற்போது எஸ்.கே.23 மற்றும் பராசக்தி ஆகிய படங்கள் உள்ளன.
இதில் சமீபத்தில் பராசக்தி படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளிவந்து அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
ரசிகர் கொடுத்த அட்வைஸ்.. சூர்யா என்ன செய்துள்ளார் பாருங்க
இந்த இரண்டு படங்களை முடித்தபின் இயக்குநர் சிபி சக்ரவத்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கப்போவதாக தகவல் வெளியானது.
மாஸ் அப்டேட்
இந்நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கப்போகும் படம் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன், இறைவன் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் அஹமத் நடிப்பில் அடுத்து நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயனை சந்தித்து ஒரு கதையை அஹமத் கூறி உள்ளார் என்றும், அந்த கதை சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்து விட்டதால் சரி என்று சொல்லியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.