விஜய் டிவி சீரியல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு இருக்கும்.
அப்படி விஜய் டிவியில் 2020ம் ஆண்டு பிரஜன் நடிக்க ஒளிபரப்பாகி வந்த தொடர் அன்புடன் குஷி, இந்த தொடரில் நாயகியாக நடித்து வந்தவர் மான்சி ஜோஷி.
ரசிகர்களின் பேராதரவை பெற்ற இந்த தொடர் எப்போதோ முடிவுக்கும் வந்துவிட்டது. இந்த தொடருக்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான Mr. Manaivi தொடரிலும் நடித்து வந்தார்.
அதன்பின் தமிழ் பக்கம் அவரை காணவில்லை.
சுந்தரி சீரியல் புகழ் நடிகை கேப்ரியல்லா செல்லஸ் வளைகாப்பு புகைப்படங்கள்.. இத்தனை பிரபலங்கள் வந்தார்களா..
திருமணம்
மான்சி ஜோஷிக்கு கடந்த வருடம் ராகவா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் மான்சிக்கு படு கோலாகலமாக திருமணம் முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.