சன் தொலைக்காட்சியில் கல்யாண பரிசு சீரியல் மூலம் முன்னணி நாயகியாக அறிமுகமானவர் நேஹா கௌடா.
இந்த தொடருக்கு பிறகு விஜய் டிவியில் கடந்த 2022ம் ஆண்டு பாவம் கணேசன் என்ற தொடரில் நடித்திருந்தார், அதுவும் முடிந்துவிட்டது.
இவர் தமிழை தாண்டி கன்னடத்திலும் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். 2018ம் ஆண்டு சந்தன் கௌடா என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு 6 வருடங்களுக்கு பிறகு பெண் குழந்தை பிறந்தது.
தற்போது குடும்பம், குழந்தை என கேமரா பக்கம் வராமல் உள்ளார்.
பேட்டி
சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலில் நேஹா தனது வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயம் பற்றி பேசியுள்ளார். நான் 4வது படிக்கம் போது ஒரு மோசமான சம்பவம் நடந்தது. அன்று அம்மா வீட்டில் இல்லை, பாட்டி தான் இருந்தாங்க.
வெற்றியடைந்த ஃபயர் திரைப்படம், பாலாஜி முருகதாஸிற்கு பரிசு கொடுத்த தயாரிப்பாளர்.. அப்படி என்ன பரிசு பாருங்க
தூங்கிவிட்டு எழுந்த போது அம்மா இல்லாததால் அவர தேடி வெளியே வந்தேன். பக்கத்து தெருவில் ஒருத்தன் உங்க அப்பா எனக்கு தெரியும் என்றார். ஒரு வாட்ச் கடைக்கு அழைத்து சென்று கதவை சாத்தினான், ரொம்ப மோசமா நடக்க ஆரம்பிச்சான்.
என்ன நடக்கிறது என தெரியாமல் அழுதேன், கத்தியை காட்டி அழதே என்றான், நல்லலா அடிச்சான். ஆனால் எப்படியோ அவனிடம் இருந்து தப்பித்து வெளியே வந்துவிட்டேன்.
சில வருடம் கழித்து டீச்சர் குட் டச் பேட் டச் சொல்லிக் கொடுக்கும் போது தான் எனக்கு நடந்த விஷயம் புரிய வந்தது. அந்த சம்பவத்தை என்னால் மறக்கவே, இப்போது நினைத்தாலும் பயமாக இருக்கிறது என கூறியுள்ளார்.