இலங்கை மத்திய வங்கியின் இலட்சிணையை தவறாகப் பயன்படுத்தி வரும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இவ்வாறு இலங்கை மத்திய வங்கியின் இலட்சிணையை தவறாகப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பல ஏமாற்றுபேர் வழிகள் மோசடியான வியாபாரங்களை நடத்தி வருவதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் இது தொடர்பில் பதிவிட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி
இதேவேளை, இவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வரும் வியாபாரங்கள் எவற்றுடனும் இலங்கை மத்திய வங்கிக்கு தொடர்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களை விழிப்பாக இருக்குமாறும், இத்தகைய மோசடியான வியாபாரங்களுக்கு அகப்பட்டு எஞ்சிய பணத்தை இழக்க வேண்டாம் எனவும் இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.


